சங்கச் சுரங்கம்! 03.07.20
ஆர் பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
பன்மாயக்கள்வன் படைத்த பாலாவுக்கு வாழ்த்து,!
தலைப்பு: இமிழ் பனிக் கடல்!
கடலின் அகலத்தை ஆழத்தைக் கண்முன்
படம்பிடித்துக் காட்டிய பேச்சிலே எந்தன்
உடல்சிலிர்க்க என்னை மறந்தேதான் கேட்டேன்!
தலைப்பு விலகா பேச்சு.
நெய்தல் நிலமக்கள் வாழ்வின் நிகழ்வுகளைத்
தொய்வின்றி ஆர்வமுடன் சங்கச் சுரங்கத்தை
நல்லதோர் ஆய்வரங்க மாக்கிய ஆற்றலைச்
சொல்லவும் சொற்களில்லை யே.
பூமியை ஆழிகள் சூழ்ந்துள்ள கோலத்தால்
மானிடரே பூமியை இங்கே நிலமென்று
கூறாமல் ஆழியென்று கூறலாமே என்றேதான்
ஆர்தர் கிளார்க் விளம்பியதை வள்ளுவரின்
நீரின்றி அமையா துலகுடன் ஒப்பிட்ட
பார்வை அணுகுமுறை நன்று.
வெள்ளிக் கிழமை விரைந்துவந்தால் நல்லதென்று
உள்ளம் விரும்புமாறு சங்கச் சுரங்கத்தில்
அள்ளி வழங்குகின்ற பாலாவை வாழ்த்துவோம்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
ஆர் பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
பன்மாயக்கள்வன் படைத்த பாலாவுக்கு வாழ்த்து,!
தலைப்பு: இமிழ் பனிக் கடல்!
கடலின் அகலத்தை ஆழத்தைக் கண்முன்
படம்பிடித்துக் காட்டிய பேச்சிலே எந்தன்
உடல்சிலிர்க்க என்னை மறந்தேதான் கேட்டேன்!
தலைப்பு விலகா பேச்சு.
நெய்தல் நிலமக்கள் வாழ்வின் நிகழ்வுகளைத்
தொய்வின்றி ஆர்வமுடன் சங்கச் சுரங்கத்தை
நல்லதோர் ஆய்வரங்க மாக்கிய ஆற்றலைச்
சொல்லவும் சொற்களில்லை யே.
பூமியை ஆழிகள் சூழ்ந்துள்ள கோலத்தால்
மானிடரே பூமியை இங்கே நிலமென்று
கூறாமல் ஆழியென்று கூறலாமே என்றேதான்
ஆர்தர் கிளார்க் விளம்பியதை வள்ளுவரின்
நீரின்றி அமையா துலகுடன் ஒப்பிட்ட
பார்வை அணுகுமுறை நன்று.
வெள்ளிக் கிழமை விரைந்துவந்தால் நல்லதென்று
உள்ளம் விரும்புமாறு சங்கச் சுரங்கத்தில்
அள்ளி வழங்குகின்ற பாலாவை வாழ்த்துவோம்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home