Friday, October 30, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!

பெண்கள் பணிபுரிந்தார் அக்காலம்!


1954--1978- 


100 வயதை நெருங்கும் 

திருமதி.லிங்கம்மாள் இராமாநுசம்

நண்பர் சந்திரனின்  அம்மா,மதுரையில் இருக்கின்றார்.



ஆணுக்கு நிகர் பெண்கள்!


மதுரை மில்ஸ் தொழிற்சாலையில் பெண்கள்!


மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சான்றோராம் 

லிங்கம்மாள் ராமாநுசம் இன்றோ வயதிங்கே

நூறை நெருங்கும் உழைப்பின் சிகரமாக!

மாமதுரை யில்வாழும் அம்மாவை  வாழ்த்துவோம்!

ஆசிகளை நாடுவோம் சூழ்ந்து.


மதுரை சிறைச்சாலை வீதியில் உள்ள

மதுரைமில்ஸ் என்ற தொழிற்சாலைக் குள்ளே

மதுரையில் பொன்னகரம், ஆரப்பா ளையம்

கிருஷ்ணாபா ளையப் பகுதிகளில் உள்ள

குடும்பத்தைச் சார்ந்த மகளிரெல்லாம் இங்கே

பகல்வேலை  செல்வார்! முடித்துவிட்டு மாலை

அகம்நோக்கி வந்திடுவார் அன்று.


பக்கத்து வீடுகளில் உள்ள முதியவர்கள்

மற்றும் பணிகளுக்குச் செல்லாத பெண்களும்

அக்கறையாய்ப் பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பேற்றார்!

இத்தகைய வாழ்க்கையே பொன்.


வேலை முடித்து வெளியே வரும்பொழுது

சேலை, தலையெல்லாம் பஞ்சுகள் காணலாம்!

ஆலை உழைப்பின் அருமைக் கவித்துளிகள்!

ஆலையின் சங்கொலி மக்கள் மணிப்பொறி!

நாள்தோறும் வாழ்ந்த நினைவு.



மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home