Wednesday, October 28, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!

இந்தக்கடை இப்போது விசுவாசபுரியில் உள்ளது.படம் அனுப்பியவர் நண்பர் முருகேசன்



ராஜூ விறகுக்கடை,மோதிலால் முக்கிய சாலை,மதுரை


1957 களில் மலரும் நினைவுகள்!


மோதிலால் முக்கிய சாலையில் அக்காலம்

ராஜூ விறகுக் கடையில் விறகுவாங்க

நான்சென்றே அங்கே குவிந்திருக்கும் சுள்ளிகளைப்

பார்த்தே விறகைப் பொறுக்கி எடைபோட்டு

வாங்கி விறகுகளை வண்டியில் ஏற்றுவேன்!

தூக்கி இழுப்பேன் வலிந்து.


மோதிலால் சாலை இரண்டில்  வீடிருக்கும்!  

ஆடி அசைந்தேதான் வண்டி இழுத்துவந்து

வீடுநோக்கி வாசலில் நிற்கவைத்தே அவ்விறகை

பாடுபட்டுக்  கையில் அடுக்கி எடுத்துவைப்பேன்!

காலியான வண்டியை மீண்டும் கடையிலே

போய்நிறுத்தி வந்திடுவேன் நான்.


மதுரை பாபாராஜ்

விறகு வாங்குவது, 

சுலபமான  பணியோ

சுவையான பணியோ

அல்ல. 

வண்டி இல்லையெனில்,

வாங்கும் எடை குறைவெனில்,

சுமக்க வேண்டும்,

சுமைதாங்கியாய்.

உடலில் களைப்பு,

உள்ளத்தில் களிப்பு,

உதவி அன்னைக்கு

என்ற  நினைப்பு. 

சுட்ட விறகென்றால்

சட்டென ஆகும்  சமையல். 

சுடாத விறகென்றால், 

சுடாது விரைவில்  அடுப்பு, 

வேகாது விரைவில்  பருப்பு,

தாமதமாகும் சமைப்பு,

கோபத்தால் கண்களில் 

நெருப்பு,

தாய் புகையில் தவிப்பு, 

காணில்நம்கண்ணில்

நீர் பெருக்கு.   

நீரும்,நெருப்பும் அதேகண்களில்,

ஒரே தருணத்தில். 

அன்றும் சுமைதாங்கி,

இன்றும்சுமைதாங்கி,

இருப்பினும்  இன்பம்,

சுகமான சுமைகளால்.

DR. சேதுராமன்

வாழ்த்து



0 Comments:

Post a Comment

<< Home