மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்
படங்கள் அனுப்பியவர்கள்:
மகள்: திருமதி.ஜெயசரசுவதி சேதுராமன்
மகன்: ராஜாராம் பத்மநாபன்
1958--1971
வீணை வித்தகர் சித்தி
தெய்வத் திருமதி சுசீலா பத்மநாபனும் ஐந்து வயது பெரியமகள் ஜெயசரசுவதியும் படத்தில்!
ஐந்து வயதில் பெரியமகள் உட்கார்ந்தே
உன்னிப்பாய் தாய்மீட்டும் வீணையைக் கேட்டிருக்கும்
கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்!
இன்றும் நினைத்தால் மகிழ்வு.
வீணையின் மீது விரல்கள் நடனம் புரிவதைக்
காணுகின்ற பேறுபெற்றோம் அக்காலம்!
சித்தியின்
வீணை இசைதன்னை திருச்சிநகர் வானொலியில்
வானலை ஏந்திவரக் கேட்டதுண்டு நாங்களன்று!
தேனமுத கானம் அது.
தியாகராசர் செட்டியார் வீட்டில். இருந்து
தினந்தோறும் கார்வரும் சித்தியும் சென்றிடுவார்!
மனையிலே பேத்திகள், ராதா மகளுமங்கே கற்றார்!
தினந்தோறும் ராதா தியாகராசன் கற்றார்!
இசையாசான் சித்திக்கு வாழ்த்து.
பாத்திமா கல.லூரி/ இசைக்கல்லூரி மதுரை
பாத்திமா கல்லூரி 1956 to 1970
இசைத்துறைப் பேராசிரியர்
1970 to 1975
இசைக் கல்லூரி பேராசிரியர்
இறுதி 3 ஆண்டுகள் பொறுப்பு முதல்வர்
பாத்திமா கல்லூரி ஆசிரியை கொஞ்சகாலம்!
ஏற்றார் பொறுப்பை இசைக்கல்லூ ரிக்குள்ளே!
போற்றும் கடமையை நாளும் திறம்பட
ஆற்றினார் ஆர்வமாய் அங்கு.
சித்தி மகனோ மிருதங்க விற்பன்னர்!
சித்தி மகள்கள் பாடுவார்கள்! கொலுவிலே
கச்சேரி நாளும் களைகட்டும் வீட்டிலே!
அப்படிப் பட்டச் சூழல் மதுரையிலே!
எங்கெங்கோ வாழ்கிறோம் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home