Saturday, December 05, 2020

13 அடக்கம்உடைமை


 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

13 அடக்கம் உடைமை

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடுமென்றார் அய்யன்!

அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான் வாழ்வு! 

அடங்காமை இருள்மய வாழ்வு.

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கென்றார் வள்ளுவர்!

போற்றும் அடக்கத்தைக் காக்கவேண்டும் செல்வம்போல் !

வேறுசெல்வம் இங்குண்டோ? கூறு.

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறினென்றார் அய்யன்!

அடக்கம் அறிவுடைமை என்றறிந்து வாழ்ந்தால்

அகங்புளிர வாழ்த்தும் உலகு.

குறள் 124:

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிதென்றார் அய்யன்!

நிலையில் பிறழாமல் தன்னடக்கம்  கொள்வோன்

பெருமை மலையின் பெரிது.

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்தென்றார் வள்ளுவர்!

எல்லோர்க்கும் பண்பே பணிவாகும்! மேலுமொரு

செல்வமாகும் செல்வந்தர்க் காம்.

குறள் 126:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்தென்றார் அய்யன்!

உறுப்புகளை ஆமை ஒடுக்கிவாழ்தல் போல

புலனடக்கம் மாந்தர்க்(கு) அரண்.

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டென்றார் வள்ளுவர்!

நாவடக்கம் சொல்லடக்கம் இல்லையெனில்  சொற்குற்றம்

ஏற்படுத்தும் ஆறாத் துயர்.

குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடுமுன்னால் வள்ளுவர்!

சொன்னசொல் ஒன்றிலே தீயசொல் வந்தாலும்

நன்சொல் அனைத்துமே பாழ்.

குறள் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடுவென்றார் வள்ளுவர்!

தீப்புண்ணோ ஆறிவிடும் தீச்சொல்லால் 

உள்ளத்தில்

ஏற்பட்ட புண்ணாறா தே.

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்தென்றார் அய்யன்!

படித்தும் அடக்கமுடன் கோபமின்றி வாழ்வோர்

வழிபார்த்து நிற்கும் அறம்.




































0 Comments:

Post a Comment

<< Home