11 செய்ந்நன்றியறிதல்
குறளுக்குக் குறள்வடிவில் கருத்து
11. செய்ந்நன்றியறிதல்
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிதென்றார் வள்ளுவர்!
நன்மையே செய்யாத மாந்தருக்குச் செய்கின்ற
நன்மைக்கு ஈடோ உலகு?
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதென்றார் வள்ளுவர்!
தேவைக் குரியநேரம் செய்கின்ற சிற்றுதவி
ஞாலத்தை விஞ்சும் அளவு
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிதென்றார் அய்யன்!
பயனெதிர் பார்க்காமல் செய்த உதவி
கடலினும் என்றும் பெரிது.
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வாரென்றார் அய்யன்!
தினையளவே நன்மை எனினும் பயனால்
பனையள வென்பார் மகிழ்ந்து.
குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்தென்றார்
அய்யன்!
உதவி அளவைப் பொறுத்தல்ல ஆனால்
உதவிபெற்றோர் பண்பைப் பொறுத்து.
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பென்றார் அய்யன்.
துறக்காதே துன்பம் துடைத்தோரின் நட்பு!
மறக்காதே தூயோர் உறவு.
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பென்றார் அய்யன்!
எழுபிறவி ஆனாலும் துயர்துடைத்தோர் நட்பைப்
பொழுதெல்லாம் எண்ணவேண்டும் சொல்.
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்றென்றார் வள்ளுவர்!
நன்மையை என்றும் மறக்காதே! தீமையை
அன்றே மறப்பது நன்று.
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடுமென்றார் வள்ளுவர்!
துன்பத்தைச் செய்தாலும் அன்பரோ
முன்செய்த
நன்மையை எண்ணி மற.
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கென்றார் வள்ளுவர்!
இங்கே அறத்தை மறந்தாலும் வாழ்வுண்டு
நன்
றி மறந்தாலோ தாழ்வு.
0 Comments:
Post a Comment
<< Home