Wednesday, December 02, 2020

என்னால் முடியும்

 என்னால் முடியும்!


தவளைப் போட்டி நடந்தது!

தவளைகள் கலந்து கொண்டன!

மலையின் அடியில் நின்றன

போட்டியை நடத்துவோர் வந்தனரே

மலையின் உச்சியை யார்முதலில்

அடைவார் என்பதே போட்டியாகும்

அனைத்துத் தவளைகள் நடந்தன

சலசல வென்று பேசின

கல்லும் முள்ளும் இருக்கிறதே

போக முடியா தென்றனவே

ஒன்றுக் கொன்று பயமுறுத்த

நடையும் தளர்ந்தே நின்றனவே

ஒரேஒரு தவளை மட்டுந்தான்

சிகரத்தை அடைந்தே பார்த்ததுவே!

நீமட்டும் எப்படிச் சென்றாயோ

மற்ற தவளைகள் கேட்டனவே

மற்றவர் சொல்லைக் கேட்காமல்

என்னால்  முடியும் எனநினைத்தேன்

முடியும் என்றே நடந்துசென்றேன்

இலக்கை அடைந்தேன் என்றதுவே

நம்மால் முடியும் நம்பிக்கை

என்றும் வெற்றியைத் தந்துவிடும்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home