மதுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
மருத்துவர் மதுசூதனன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
நாள் 02.12.2020
இல்லற முத்துக்கள்:
மனைவி: வைதேகி. மகள்:Riya Shanvi..
வள்ளுவம்போல் வாழ்க மகிழ்ந்து.
குறள் 66:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
மழலைப் பருவ மகளுடன் மகிழ்ந்தே
வளமுடன் வாழ்கபல் லாண்டு.
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தந்தை மகிழ்கின்றார் தந்தை நிலையிலே
தந்தையாய் உங்கள் கடமையைச் செய்தேதான்
உங்கள் குழந்தை வளர்வதைப் பார்த்தேதான்
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
குறள் 69: மகள் வைதேகிக்கு
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தாயின் மகிழ்வில் களிக்கின்ற நீங்களும்
தாய்மகிழ்வைக் காணவேண்டும் என்றென்றும் வாழ்விலே!
வாழ்க வளங்களைப் பெற்று.
குறள் 70:
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
அகம்மகிழ்ந்தே உங்களை இப்படிப் போற்றும்
மகத்துவத்தைப் பார்க்கின்றோம் இங்கு!
மகளும் வளர்ந்து புகழ்பெற்று வாழ்வாள்!
அகங்குளிரப் போற்றுவார் சூழ்ந்து.
பெற்றோரின் ஆசியுடன் இல்லத் தரசியின்
உற்ற துணையுடன் உற்றார் உறவினர்கள்
நற்றமிழில் வாழ்த்திசைக்க பல்லாண்டு வாழியவே!
வெற்றியுடன் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home