மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்
1979 களில்
திருமலைக்காலனி வீடு!
சம்பள நாளும் பூனைகளும்!
வீட்டிலே நாலைந்து பூனைகள் வாழ்ந்தன!
மாத இறுதியில் சம்பளம் வாங்கிவந்தால்
பூனை குறுக்கே நடப்பது ஆகாதாம்!
பூனைகளை ஒவ்வொன்றாய் அம்மா பிடித்தேதான்
கூடைக்குள் போட்டே அடைத்திருப்பார்! சம்பளத்தை
வாங்கியதும் அம்மாவும் பூனைகளைக் கூடைவிட்டே
தூக்கி விடுவிப்பார் அங்கு.
தெருப்பூனையும் காசியும்!
நரவண்டி ஓட்டுநர் காசிக்கு அம்மா
உளவியல் பார்வை அறிவார்! அதனால்
நரவண்டி அம்மாவுடன் செல்கின்ற நேரம்
தெருவிலே பூனை குறுக்கேதான் சென்றால்
நரவண்டி நிற்கும்! திருப்பி அடுத்த
தெருவழியாய்ப் போவார் சிரித்தேதான்! அம்மா
திருப்தி அடைந்திடுவார் பார்த்து.
மதுரை பாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home