மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்
ஓவியம்:
நண்பர் கேப்ரியல் பெர்னாண்டோ
1955--1958
கார்த்திகை விழா!
சிறுவனாக வலம்வந்தபோது கார்த்திகை நாளில்!
தெருத்தெரு வாக நடந்துசெல்வோம்! வீட்டின்
சுவர்களில் கம்பிகளுக்கு மத்தியில் மாடிக்
குடியிருப்பில் என்றே விளக்குகள் தம்மை
அருகருகே வைத்திருக்கும் கோலம் அழகு!
பெருமகிழ்ச்சி உள்ளத்தில் அன்று.
கம்பி முனையில் துணிகளைக் கட்டிவைத்தே
எண்ணெயில் முக்கி நெருப்பினைப் பற்றவைப்பார்!
பந்தம் எரியும்! சுழற்றுவார் கம்பியை!
அங்குமிங்கும் ஓடுவார் பார்த்து.
தீப்பந்தம் சுற்றுவதே தேர்ந்த கலையாகும்!
காற்றடிக்கும்! தூறல் மழைபெய்யும்! இப்படித்
தாக்கும் தடைகளிலும் பந்தத்தைச் சுற்றுவார்
ஆற்றலும் வீரமும் என்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home