Thursday, December 03, 2020

10 இனியவைகூறல்

 10 இனியவை கூறல்

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்லென்றார் வள்ளுவர்!

அன்புடன் மாசற்ற உள்ளத்தின்  வாய்மையே

இன்சொல் லாகும் உணர்.

குறள் 92:

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறினென்றார் அய்யன்.

முகம்மலர்ந்தே இன்சொல் பேசுகின்ற பண்போ

அகங்குளிர ஈவதினும் மேல்.

குறள் 93:

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறமென்றார் அய்யன்!

முகம்மலர்ந்து பார்த்தே அகங்குளிர இன்சொல்

இதமாகச் சொல்வ தறம்.

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கென்றார் வள்ளுவர் 

இன்சொல் பேசிப் பழகுவோர்க்கோ புண்படுத்தித்

துன்புறுத்தும் ஏழ்மையில்லை சாற்று.

குறள் 95:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிறவென்றார் அய்யன்!

பணிவான  பண்புகளும்  இன்சொல் இயல்பும்  

அணிகலனாம்! மற்றவை வீண்.

குறள் 96:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலினென்றார் வள்ளுவர்!

நல்லதை எண்ணி  இன்சொல்லை ஊன்றவைத்தால்

நல்லறம் கூடும் நிலைத்து.

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்லென்றார் அய்யன்.

பயன்தரும் சொற்களைப் பேசுவோர்க்கு

நன்மை

தழைக்கின்ற இன்பம் தரும்.

குறள் 98:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தருமென்றார் அய்யன்!

கடுமையற்ற இன்சொற்கள் எக்காலும்

இன்ப

நிறைவும் புகழும் தரும்.

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வதென்றார் வள்ளுவர்!

இன்சொற்கள் நன்மை அறிந்தபின்பும் 

புண்படுத்தும் 

வன்சொற்கள் பேசுவ தேன்?

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்றென்றார் அய்யன்!

இனியசொல் உள்ளபோது வன்சொல் கூறல்

கனியிருக்க காய்பறிக்கும் போக்கு.




































 


0 Comments:

Post a Comment

<< Home