எள்ளாமை வேண்டும்
குறள்சொல்லும் மேலாண்மை 49
நன்றி: சோம வீரப்பன்
எள்ளாமை வேண்டும்!
ஆற்றைக் கடக்க படகினிலே
ஞானி ஒருவர் பயணித்தார்
போகும் போது படகோட்டி
படிப்பைக் கேட்டார் பார்த்தேதான்
பள்ளிக் கூடம் போனதில்லை
என்றே கூறினார் படகோட்டி
எத்தனை மொழிகள் தெரியுமென்றார்
தாய்மொழி மட்டும் எனச்சொன்னார்
வேதங்கள் பெயரைச் சொல்லென்றார்
தெரியா தென்றார் படகோட்டி
நமட்டுச் சிரிப்புச் சிரித்தேதான்
எல்லாம் எனக்குத் தெரியுமென்றார்
அந்த நேரம் புயலடிக்க
படகோ ஆடத் தொடங்கியது
ஞானியைப் பார்த்துப் படகோட்டி
நீந்தத் தெரியுமா எனக்கேட்டார்
தெரியா தென்றார் நம்ஞானி
தெரியும் என்றார் படகோட்டி
ஏதும் தெரியா படகோட்டி
எல்லாம் தெரிந்த ஞானியைத்தான்
காத்தார் அங்கே விபத்தின்றி
நன்றி சொன்னார் நம்ஞானி
உருவு கண்டே எள்ளாமை
வள்ளுவர் சொன்னார் அன்றேதான்
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home