மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்!
ஸ்டாண்டர்ட் சைக்கிள் கடை
மோதிலால் மெயின் ரோடு, மதுரை
1967 -- 1971 களில்
நண்பர்கள்:
உரிமையாளர்: திரு.அழகர்
ராம்ராஜ்,நாராயணசாமி,ராமமூர்த்தி,
கிருஷ்ணன்,எத்திராஜ்,தசரதன்,முத்து,
சந்திரன்,பிச்சால்,நாகராஜ்,பாண்டி,
சுப்புராம்,அழகர்,பாபாராஜ்,சாய்சுந்தர்
அழகரண்ணன் அன்பாய்ப் புன்னகைப்பார் பார்த்து!
எளிமையான ஆடை அரசியல் ஆர்வம்!
தெளிவான பேச்சு! மனிதநேய எண்ணம்!
அழகர் பெயரின் உரு.
நாள்தோறும் மாலைப் பொழுதிலே கூடுவோம்!
ஆர்வமுடன் நாங்களோ கட்சி அரசியல்
மற்றும் திரைப்படங்கள் என்றே அரட்டைதான்!
சுற்றியுள்ளோர் எங்கள் குரல்களைக் கேட்டேதான்
எட்டியெட்டிப் பார்ப்பார் சிரித்து.
மிதிவண்டி வாடகை அங்காடி முன்னே
எதிரும் புதிருமாய் நின்றுகொண்டு பேச
அதிரும் குரல்கள் அரசியல் பக்கம்
வெறியுடன் சூழல் மறப்போம் குதித்து!
குறியெலாம் கட்சி இலக்கு.
வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தேதான் பேசுவோம்!
எல்லோரும் பேசிக் கலைவோம் இரவிலே!
இன்றும் நினைத்துச் சிரித்தே மகிழ்கின்றோம்!
அந்தநாள் என்றுவரும்? சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home