மாறிப்போன வாழ்க்கை!
வழக்கொழிந்து போன வகைவகை யான
பயன்பாட்டுச் சாதனங்கள் காட்சிப் பொருளாய்
பலஉருவில் கல்வடிவில் பொம்மை நிலைதான்!
உடற்பயிற்சி பெண்களுக்கு நாளும் இயற்கை
கொடுத்தது போக செயற்கையாய்க் கூடம்
பயிற்சி கொடுக்கும் நிலைவந்தே நாளும்
படையெடுக்கும் வாழ்வான தே .
0 Comments:
Post a Comment
<< Home