Monday, December 07, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!

1986 களில்

முடக்குச்சாலை கோச்சடை

தெய்வத்திரு ராம்பாய் மதினி -- 

அம்பா அவர்கள்!



பென்னர் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது!


இல்லத்தை விட்டு மிதிவண்டி ஏறித்தான் செல்வேன் அலுவலகம் நோக்கியே! நாள்தோறும்

செல்லும் வழியிலே அண்ணியார் வீட்டுக்குச்

செல்வேன் முடிந்தபோ தெல்லாம்! வரவேற்பார்

புன்னகைப்பார்! பாபாஜி என்றழைப்பார் அன்புடன்!

உள்ளே அமர்ந்ததும் தேநீரைத்  தந்திடுவார்!

நல்ல அறவுரைகள் சொல்வார்! வாழ்க்கையின்

நல்லொழுக்கப் பாதை நெறிகாட்டும் அம்சங்கள்

எல்லாம் விளக்குவார் நன்கு.


பத்து மணித்துளிகள் பேச்சில் அனுபவ

முத்திரைகள் பட்டுத் தெறிக்கும் அறிவுரையாய்!

இப்போதும் எண்ணி மகிழ்கின்றேன் நாள்களை!

எப்போது மீண்டும் வரும்?


எண்ணற்றோர் வாழ்வில் குருவாக வாழ்கின்றார்!

நம்புவோர்க்குத் தெய்வத்தைச் சொல்வார்! இல்லையேல்

நம்புவதை ஏற்றுக்கொள் பெற்றோரைப் போற்றென்பார்!

அண்ணியார் என்றும் துணை.



0 Comments:

Post a Comment

<< Home