Saturday, December 05, 2020

பேத்தி தேஜஸ்வினி பிறந்தநாள் வாழ்த்து!


 பேத்தி தேஜஸ்வினி பிறந்தநாள் வாழ்த்து!

(மின் மற்றும் மின்னணு பொறியியல்!)

பெற்றோர்:

சரவணப்பெருமாள்-- சித்ரா

06.12.20

பொறியியல் கல்லூரி மூன்றாவ தாண்டில்

படிக்கின்றாள் பேத்தி! மனங்குளிர வெற்றி

அடைந்தேதான் வாழ்க! அருமையாக வாழ்க!

நிறைவுடனே வாழ்கபல் லாண்டு.


பெற்றோரின் ஆசிகளும் தாத்தாவும் பாட்டியும்

உற்றார் உறவினரும் வாழ்த்திசைக்க

வாழியவே!

எப்போதும் பன்முக ஆற்றலுடன் வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பம்



0 Comments:

Post a Comment

<< Home