Tuesday, January 26, 2021

திருமணவாழ்த்துப்பா

 திருமணவாழ்த்துப்பா

இணையர்:

மணமகன்:M. வினோத் ராஜா

மணமகள்:M.மோனிஷா ராகவி

திருமணநாள்: 27.01.21

குறள்நெறிப் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

இல்லறப் பத்து!

==================================

1.விருந்தோம்பல் 

===================

விருந்தினர் வந்து கலந்துற வாடி

பெருமிதம் கொள்வதோ அந்தவீட்டின் ஆண்பெண்

விருந்தோம்பல் பண்பின் சிறப்பினால் தானே !

விருந்தோம்பல் இல்லறத்தின் வேர்.

--------------------------------------------------------------------

2.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை 

==================================

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்

கற்றுக் கொடுக்கும் இல்லறத்தைப் போற்றுங்கள்!

விட்டுக் கொடுப்பதால்  கெட்டுத்தான் போவதில்லை!

சுற்றத்தின் ஒற்றுமையே வாழ்வு.

--------------------------------------------------------------------

3.இணக்கமுடன் வாழ்க

====================

கணவன் மனைவி கருத்தொரு மித்தே

இணக்கமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் என்றும்!

பிணக்கத்தை ஊடுருவ விட்டால் நாளும்

சுணக்கத்தை உண்டாக்கும் இங்கு.

--------------------------------------------------------------------

4.இருபாலரும் சமம்.

===================

மகனோ மகளோ சமமாய்க் கருது!

உகந்த உரிமைகளை நாளும் வழங்கி

அகத்திலே பேதமின்றி கல்வியைத் தந்தால்

அகங்குளிர வாழ்வார் வளர்ந்து.

--------------------------------------------------------------------

5.பண்புகளை ஊட்டுங்கள்

======================

நல்லநல்ல பண்புகளை நாள்தோறும் ஊட்டுங்கள்!

நல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து

எல்லோரும் போற்றிடவே ஏற்றமுறச் செய்யுங்கள்!

எல்லைக்குள் வாழப் பழக்கு.

--------------------------------------------------------------------

6.குழந்தைகளின் கடமை

===========================

பெற்றோர் இமையாகிப் பிள்ளைகளைக் காப்பதுபோல்

பெற்றோர்க்கோ  இங்கே குழந்தைகள் நாள்தோறும்

உற்றதுணை யாகித்தான்  நன்றி மறவாமல்

பெற்றோரைக் காக்கவேண்டும் இங்கு.

--------------------------------------------------------------------

7.பெரியவர்களின் ஆசிகள்

=======================

அன்புடன் பண்பும் பணிவும் ஒழுக்கமும்

உண்மையும் நேர்மையும் ஒன்றிக் கலந்திட

என்றும் பெரியவர்கள் ஆசியுடன் இல்லறம்

மங்கலமாய் வாழவேண்டும் சொல்.

--------------------------------------------------------------------

8.சுற்றத்தார் வாழ்த்து

=====================

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்றேதான்

சுற்றம் தழைத்திட நாளும் பழகவேண்டும்!

அக்கறை காட்டி அனைவரின் வாழ்த்தையும்

பெற்றேதான் வாழ்தல் சிறப்பு.

--------------------------------------------------------------------

9.விலக்கவேண்டியவை

================= ========

கோபம்,பொறாமை,சிடுசிடுப்பு ஆகியவற்றை

வேகமாய்க் காட்டிப் பழகினால் பெற்றெடுத்த

ஈடற்ற பிள்ளைகளும் இங்கே வெறுத்திடுவார்!

நாடறிய  நல்வழி காட்டு.

--------------------------------------------------------------------

10.பெற்றோரே வழிகாட்டிகள்

===========================

அம்மாவும் அப்பாவும் தென்றல்போல் பழகவேண்டும்!

அஞ்சாமல் பிள்ளைகள் தேடிவந்து பேசவேண்டும்!

கண்டிப்பின் எல்லையைப் பெற்றோர் உணரவேண்டும்!

அன்பும் அரவணைப்பும் பிள்ளைகள் நேர்வழியில்

பண்புடன் வாழவைக்கும் கூறு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home