Monday, January 25, 2021

106 இரவு


குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து

106 இரவு

குறள் 1051:

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.


கொடுக்க முடிந்தவர்கள் கேட்பவ ருக்குக்

கொடுக்கவில்லை என்றால் பழியோ அவர்க்கே!

இரந்தவர்க் கல்ல உணர்.

குறள் 1052:

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.


தருவோர் மனமுவந்து தந்தால் மகிழ்ச்சி!

இரப்பதும் இன்பந்தான் சொல்.

குறள் 1053:

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்

றிரப்புமோர் ஏஎர் உடைத்து.


திறந்த மனதும் கடமை உணர்வும்

உறவாடும் மாந்தரிடம் சென்றே இரத்தல்

பெருமைக் குரியதே செப்பு.

குறள் 1054:

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.


கனவிலும் உள்ளதைக்  கூறுவோரை நாடி

இரத்தலும் ஈதலே செப்பு.

குறள் 1055:

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்

றிரப்பவர் மேற்கொள் வது.


ஒளிவு மறைவற்றோர் உள்ளதால் சென்றே

இரக்கின்றார் நம்பிக்கை யோடு.

குறள் 1056:

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்


உள்ளதை இங்கே மறைக்கின்ற நோயற்றோர்

உள்ளதால் இல்லாமை நோயழியும் சொல்.

குறள் 1057:

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்ப துடைத்து.


இகழாமல்  கொடுப்போர் கொடுத்தால் இரப்போர்

அகம்மகிழ்வார் நன்றியுடன் தான்.

குறள் 1058:

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.


இரப்பவர்கள் இல்லா உலகம் வெறும்

மரப்பொம்மை வந்துபோதல் போல்.

குறள் 1059:

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.


இரப்பவர்கள் கேட்காத வாழ்க்கையில் நாளும்

கொடுப்பவர்க்கு நற்புகழ் ஏது?

குறள் 1060:

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.


இரப்போர் சினம்கொள்ளல் தப்பு!

வறுமை

சுரப்பதே கோபத்தின் சான்று.


































0 Comments:

Post a Comment

<< Home