Sunday, January 24, 2021

103 குடிசெயல் வகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

103 குடிசெயல் வகை

குறள் 1021:

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்

பெருமையிற் பீடுடைய தில்.


வீட்டையும் நாட்டையும் போற்றுகின்ற சூளுரைக்கு

வேறு பெருமையுண்டோ? சொல்.

குறள் 1022:

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்

நீள்வினையான் நீளும் குடி.


முயற்சி அறிவுடன் பேருழைப்பால் நாளும்

உயர்வது வீடுடன் நாடு.

குறள் 1023:

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


குடிமக்கள் வாழ உழைத்தால் இயற்கை

வரிந்துகட்டி வந்துதவும் செப்பு.

குறள் 1024:

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு.


குடியை உயர்த்தும் உழைப்பிற்கு ஆற்றல் 

மதித்துவரும் தானாய் விரைந்து.

குறள் 1025:

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.


நாட்டு நலனிலே அக்கறை கொண்டோரை 

நாட்டுமக்கள் சுற்றமென்பார் சூழ்ந்து.

குறள் 1026:

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

தன்குடியைக்  காக்கின்ற ஆற்றலின் தன்மையே ஆளுமையாம் சொல்.

குறள் 1027:

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.

போரின் சுமையோ வீரருக்கே! இல்லறத்தைத்

தாங்குவோர்க்கே வீட்டுச் சுமை.

குறள் 1028:

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.


கடமைக்குக் காலநேரம் இல்லை! சோம்பல்

சுணக்கம் குடிக்கே அழிவு.

குறள் 1029:

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பான் உடம்பு.


குடும்பச் சுமைதாங்கி துன்பத்தைத் தாங்க

உடம்பிங்கே கொள்கலனோ? கூறு.

குறள் 1030:

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இலாத குடி.


துன்பத்தைச் சந்திக்க ஆளற்ற வீடிங்கே

துன்பத்தால் சீரழியும் வீழ்ந்து









































0 Comments:

Post a Comment

<< Home