Thursday, January 21, 2021

96 குடிமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

96 குடிமை

குறள் 951:

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.


நடுநிலை மற்றும் அடக்கம்,சிறந்த

குடும்பத்தார் பண்புக ளாம்.

குறள் 952:

ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.


ஒழுக்கமும் நாணமும் உண்மையும் நல்ல

குடிபிறந்தார் போற்றும் நெறி.

குறள் 953:

நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.


முகமலர்ச்சி,ஈகை, இனிமை, மற்றும்

இகழாமை நற்குடியார் பண்பு.

குறள் 954:

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.


கோடி கொடுத்தாலும் நல்லோர் குடிப்புகழ்

கேடுற ஏற்கமாட்டார் சொல்.

குறள் 955:

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல் இன்று.


பழம்பெருமை மாண்புடன் வாழ்வோர் வறுமை

பிழிந்தெடுத்த போதும் கொடைப்பண்பை என்றும்

இழக்காமல்  காப்பார் சொல்.

குறள் 956:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்துமென் பார்.


களங்கமற்றோர் என்பவர் வஞ்சகம் செய்யும்

நிலையெடுக்க மாட்டார் விளம்பு.

குறள் 957:

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.


நற்குடி சார்ந்தோரின் குற்றம் நிலவிலே

உள்ள களங்கம்போல் ஊரில் தெரிந்துவிடும்!

குற்றமின்றி வாழ்தல் உயர்வு.

குறள் 958:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.


அன்பென்னும் பண்பின்றி வாழ்பவனின் 

நற்குடும்பப்

பின்னனியை எள்ளுவர் இங்கு.

குறள் 959:

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.


விளைந்த பயிரோ நிலமுரைக்கும்! வாய்ச்சொல்

பிறந்த குடிசொல்லும் செப்பு.

குறள் 960:

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.


நாணமெனும் பண்பால் நலம்விளையும்!

நற்குடும்ப

வான்புகழ் பண்பே பணிவு.






















.



0 Comments:

Post a Comment

<< Home