89 உட்பகை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
89 உட்பகை
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
நீரும் நிழலும் கெடுதிசெய்தால் தீமையே!
சேர்ந்திருக்கும் உற்றார் உறவினரின் பண்பிலே
வேரோடும் உட்பகையும் தீது.
குறள் 882:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
வாள்போல் தெரியும் பகைக்கஞ்சத் தேவையில்லை!
தோழமையில் உட்பகை நஞ்சு.
குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகைக்கோ அஞ்சித்தான் காக்கவேண்டும்! இல்லையேல்
மட்கலத்தைச் சீரழிக்கும் வாள்போல்
அழித்துவிடும்!
உட்பகை வேரறுக்கும் வாள்.
குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
நண்பராய்த் தோன்றினாலும் உட்பகையைத் தேங்கவிட்டால்
என்றுமே நட்பிற்குக் கேடு.
குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
உறவுகளின் உள்ளத்தில் உட்பகை என்றால்
இறக்குமட்டும் துன்பந்தான் சொல்.
குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
ஒன்றாய் இருந்தோரின் உட்பகை குமுறினால்
என்றும் அழிவுதான் சொல்.
குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
பொருந்திய மூடிபோலத் தோன்றினாலும் உள்ளே
பொருந்தாதே உட்பகையைத் தேக்கும் உறவு!
வருந்தவைத்துப் பார்க்கும் வெடித்து.
குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி.
உட்பகை உள்ள குடும்பம் அரம்தேய்க்க
முற்றும் அழியும் இரும்பு.
குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
எள்ளின் பிளவாய்ச் சிறிதெனினும், உட்பகை
துள்ளவைக்கும் மாபெரும் கேடு.
குறள் 890:
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று.
உடன்பாடே இல்லாமல் சேர்ந்திருக்கும் வாழ்க்கை
குடிசைக்குள் பாம்புடன் போல்
0 Comments:
Post a Comment
<< Home