87 பகைமாட்சி
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
87 பகைமாட்சி
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
வலிமை படைத்தவரா போர்செய்ய வேண்டாம்!
வலிமையற்றோர் என்றால் எதிர்.
குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
அன்பின்றி, தக்க வலுவின்றி, ஆற்றலின்றி
உள்ளோர் பகைவெல்தல் ஏது?
குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
அஞ்சுவதற் கஞ்சாமல் ஒற்றுமையாய் வாழாமல்
நெஞ்சில் இரக்கமும் இல்லாமல் வாழ்பவனை
வெம்பகை வெல்தல் எளிது.
குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
கோபத்தைக் கைவிடாத, காப்பதைக் காக்காமல்
ஆள்வோரை வெல்தல் எளிது.
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
நல்வழியில் செல்லாமல் நல்லதைச் செய்யாமல்
எப்பழிக்கும் அஞ்சாமல் பண்பின்றி வாழ்பவனை
எப்பகையும் வெல்தல் எளிது.
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
எப்போதும் சீறுவோனை பேராசைக் கொண்டவனைச்
சுற்றும் பகைவெல்லும் சொல்.
குறள் 867:
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
உடனிருந்தே தாறுமாறாய்ச் செய்வோர்
பகையைப்
பொருள்கொடுத்தும் பெற்றுக்கொள் இங்கு
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து.
பண்புமின்றி, குற்றம் பலபுரிந்தோர் எத்துணையும்
இன்றியே சீரழிவார் தோற்று.
குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
அறிவிலியாய் கோழையாய் இங்கே பகைவர்
அமைந்துவிட்டால் என்றும் எதிரணிக்கு வெற்றி
நிரந்தரமாய் மாறிடும் செப்பு.
குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
கற்கா தவனைப் பகைக்கும் செயல்செய்ய
முற்படாத மாந்தரிடம் எந்தப் புகழ்மகுடம்
தங்கித் தழைக்குமென்று சாற்று?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home