84 பேதைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
84 பேதைமை
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்.
தீமையை ஏற்றேதான் நன்மையைக் கைவிடுதல்
பேதைமை என்றே உணர்.
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
தன்னால் இயலாத ஒன்றினைச் செய்வதே
பேதைமையுள் பேதைமையாம் சாற்று.
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
தீமைக்கு நாணாமை ஏற்றதை நாடாமை
பாமணக்கும் அன்பின்மை காப்பதைக் காவாமை
பேதை இயல்பாகும் சாற்று.
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்.
கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்
கற்றதைப்பின்
பற்றாமை பேதையா ராம்.
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
இப்பிறவி வாழ்வில் ஏழு தலைமுறைத்
துன்பங்கள் பேதைக்கே உண்டு.
குறள் 836:
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
செய்வதைச் செய்யத் தெரியாமல்
பேதையோ
செய்துவிட்டுக் கெட்டழிவான் சாற்று.
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
பேதையின் செல்வத்தால் மற்றவர்க்கே நன்மையாம்!
வாடுவார் சுற்றம் துடித்து.
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.
பேதைக்குச் செல்வம் கிடைத்துவிட்டால்
பித்தனோ
போதையில் துள்ளுதல்போல் தான்.
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
அறிவிலியின் நட்போ இனிமைதான்! அந்தப்
பிரிவிலே துன்பமில்லை கூறு.
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
காலைப் படுக்கையில் வைத்ததுபோல் பேதையோ
சான்றோர் அவைநுழைத லாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home