Thursday, January 14, 2021

83 கூடா நட்பு



குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

83 கூடா நட்பு

குறள் 821:

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.


நட்பிலே  வேடமேந்தும் மாந்தர்கள் வாய்ப்புவந்தால் 

வெட்டுகின்ற பட்டடைக் கல்.

குறள் 822:

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.


நண்பர்போல் நாளும் நடித்துப் பழகுவோர்

கள்ளமனம்  கொண்டவிலை மாது.

குறள் 823:

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.


நல்லநூல்கள்  கற்றும் பகைக்குணம் கொண்டவர்கள்

நல்லவறாய் ஆதல் அரிது.

குறள் 824:

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.


முகத்தில் சிரிப்பும் அகத்திலே வஞ்சம்

உடையோ ரிடம்பழக அஞ்சு.

குறள் 825:

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற் றன்று.


உள்ளத்தால் நட்பின்றி  உள்ளவரின் சொற்களை

நம்புதல் என்றுமே தீது.

குறள் 826:

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.


பகைவரோ நண்பரைப்போல. பேசினாலும் சொல்லின்

சிறுமை வெளிப்படும் இங்கு.

குறள் 827:

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.


பகைவரின் சொல்வணக்கம் வில்வணக்கம் போல

கெடுதி விளைவிக்கும் காண்.

குறள் 828:

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.


பகைவணங்கும் கைகளுக்குள் ஆயுதம்

உண்டு!

இமைநனைக்கும் கண்ணீரின் பின்னே சதியின்

அமைப்பிருக்கும் என்றே உணர்.

குறள் 829:

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுட் சாப்புல்லற் பாற்று.


புறத்தில்  புகழ்ந்தே அகத்தில்  இகழும்

பகைவரிடம் அப்படியே நாமும் 

உளத்தே

தவிர்த்திடுவோம் நட்பை நடித்து.

குறள் 830:

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்

டகநட் பொரீஇ விடல்.


பகைவரே நண்பராக நேர்ந்தால் முகத்தில்

படரலாம் நட்புதான்! உள்ளம் அதையும்

விடுவது என்றுமே நன்று.



































0 Comments:

Post a Comment

<< Home