விடியலைப் படைத்துக் காட்டு
விடியலைப் படை!
விழிகளில் ஒளியை ஏற்று--நாளை
விடியலைப் படைத்துக் காட்டு!
வன்முறைப் பாதையைத் தூற்று--அது
என்றும் வேதனை ஊற்று!
அறநெறி தென்றல் காற்று--அது
அமைதிக்குப் பாடும் வாழ்த்து!
வறுமைப் பிணியைப் போக்கு--அதற்கு
வழிகளைத் திரட்டி முடுக்கு!
துரோகம் செய்வதை நீக்கு--நெஞ்சில்
தூய எண்ணத்தைத் தேக்கு!
எதற்கெடுத் தாலும் விரக்தி--பொங்கும்
நிலையை உடனே துரத்து!
குறள்நெறி தன்னைப் போற்று-- வாழ்வில்
அறநெறி விளக்கை ஏற்று!
நம்பிக் கைதான் வாழ்க்கை--அதில்
மலரும் வெற்றிப் பூக்கள்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home