Monday, January 11, 2021

75 அரண்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

75 அரண்

குறள் 741:

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.


படையெடுத்துப் போரிடவும், தாக்கும்

பகையைத்

தடுப்பதற்கும் காப்பே அரண்.

குறள் 742:

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.


நீரும் நிலமும் மலையும் நிழற்காடும்

சேர்ந்ததே நாட்டுக் கரண்.

குறள் 743:

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.


உயரம், அகலம், உறுதி, அருமை

அரணுக் கிலக்கணம் சாற்று.

குறள் 744:

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.


காக்கும் இடம்சிறிதாய் உட்புறம் பேரிடமாய்

தாக்கும் பகையஞ்சும் கோலத்தை ஏந்துகின்ற

காட்சியைக் கொண்ட தரண்.

குறள் 745:

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீர தரண்.


பகைவர்க் கரிதாய், உணவுளதாய்,

உள்ளே

படைகளுக்கும் பாதுகாப்பாய் உள்ள

வசதிகள் கொண்ட தரண்.

குறள் 746:

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்

நல்லா ளுடைய தரண்.


போர்ப்பகையைச் சந்திக்க ஏற்ற பொருள்வகைகள்,

ஆள்வலிமை கொண்ட தரண்.

குறள் 747:

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரிய தரண்.


முற்றுகை இட்டோ, இடாமலோ எப்பகையும்

பற்றற் கரிய தரண்.

குறள் 748:

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வ தரண்.


முற்றுகை இட்டாலும் உள்ளிருந்து போர்ப்பகையை

வெல்வதற் கேற்ற தரண்.

குறள் 749:

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.


உள்ளிருந்து போர்ப்பகையைச் சந்தித்து வெற்றிகொள்ளும்

தற்காப்பைக் கொண்ட தரண்.

குறள் 750:

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்ல தரண்.


எல்லாச் சிறப்பிருந்தும் கோட்டைக்குள் வீரராக

இல்லையென்றால் என்னபயன்? சொல்.


























0 Comments:

Post a Comment

<< Home