Saturday, January 09, 2021

72 அவையறிதல்


 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

72 அவையறிதல்

குறள் 711:

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.


சொற்களின் தன்மை, அறிஞர், அவையோரின்

பண்பறிந்து பேசுதல் நன்று.

குறள் 712:

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.


அவையின் நிலையறிந்து காலம் அறிந்தே

சுவையாகப் பேசவேண்டும் சொல்.

குறள் 713:

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.


அவையின் இயல்பறியா பேச்சென்றால்

சொல்லின்

வகையும் திறனுமற்ற பேச்சு.

குறள் 714:

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணங் கொளல்.


அறிஞர்கள் முன்பு அறிவுடன் பேசு!

அறிவிலார்முன் பேசாமை நன்று.

குறள் 715:

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.


அறிஞர் அவையிலே முந்திநின்று பேசும்

அறியாமை விட்டே அடக்கத்தைக் காக்கும்

நெறியொன்றே நன்மை தரும்.

குறள் 716:

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.


அறிஞர் அவையில் பிழையான பேச்சோ

நெறியொழுக்கம் வீழ்ந்ததுபோ லாம்.

குறள் 717:

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.


அறிஞரின் கல்வித் திறனுக்குச் சான்றோ

செறிவான மாசற்ற பேச்சு.

குறள் 718:

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.


பேச்சை உணர்வோர்முன் பேசுவது பாத்தியில்

நீரூற்றும் நற்பயன்போ லாம்.

குறள் 719:

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.


நல்லோர் அவையிலே பேசும் திறன்படைத்தோர்

பொல்லாதோர் முன்தவிர்த்தல் நன்று.

குறள் 720:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்.


ஒத்த உணர்வற்றோர் கூட்டத்தில்  பேசல்,

கழிவுநீரில்

கொட்டிய நல்லமுதுக் கொப்பு.






























0 Comments:

Post a Comment

<< Home