Monday, January 11, 2021

77 படைமாட்சி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

77 படைமாட்சி

குறள் 761:

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.


எல்லாப் படைகளுடன் எந்தத் தடைகளையும்

வெல்லும் படைகொண்ட வேந்தனுக்கோ அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் சிறப்பு.

குறள் 762:

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.

படைவலிமை குன்றினாலும் அஞ்சாமல் 

நிற்கும்

பெருமையோ என்றும் படைப்பயிற்சி ஏற்ற

அருமையான வீரருக்கே உண்டு.

குறள் 763:

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.


கடல்போல் எலிகள் முழங்கினாலும் நாகம்

படமெடுத்தால் ஓடிவிடும் சாற்று.

குறள் 764:

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.


வெல்ல முடியாத சூழ்ச்சியை ஏற்காத

நற்படையே மெய்ப்படை யாம்.

குறள் 765:

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.


உயிர்போகும் என்றாலும் போரிடும் வீரம்

வலிமைக்குச் சான்றாகும் சாற்று.

குறள் 766:

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.


வீரமும் மானமும் நன்னடத்தை போர்த்தெளிவும்

சேர்ந்த படையே சிறப்பு.

குறள் 767:

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.


போரில் முதல்படையை வெற்றிகொண்டால் போர்வெற்றி

காணும் படைவலிமை யால்.

குறள் 768:

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.


படைத்திறன் தாங்குமாற்றல் இல்லை எனினும்

படைத்தோற்றம்  கூட்டும் சிறப்பு.

குறள் 769:

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.


படைக்குறைவு, ஏழ்மை, வெறுப்பற்ற சூழல்

படைவெற்றி காணும் உணர்.

குறள் 770:

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.


படைவீரர் உண்டு! படைத்தலைமை இன்றேல்

படைகளால் என்னபயன் சொல்?































0 Comments:

Post a Comment

<< Home