78 படைச் செருக்கு
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
78 படைச்செருக்கு
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்.
என்மன்னர் முன்வந்தே போர்செய்தல் நல்லதல்ல!
வந்தால் நடுகல்தான் சொல்.
குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
முயலொன்றை வீழ்த்துவதைக் காட்டிலும் யானை
தவறிய வேலிங்கே மேல்.
குறள் 773:
பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவருக் கஞ்சாமை ஆண்மை! அந்தப்
பகைவர் துயர்தீர்த்தல் பேராண்மை என்பர்!
பகைவரையும் காத்தலே பண்பு.
குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
கைவேலை யானைமேல் வீசிவிட்டே தன்னுடலில்
தைத்தவேல் பார்த்தான் நகைத்து.
குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.
பகைவரின் வேல்வரும் நேரம், இமைத்தால்
புறமுதுகிட் டோடியதற் கொப்பு.
குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து.
போரில் விழுப்புண்கள் அற்றநாளை எண்ணி
வீரனோ வீணென்பான் சாற்று.
குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
புகழ்நிலைக்க எண்ணி உயிர்விடும் வீரர்
கழலணிதல் என்றும் அழகு.
குறள் 778:
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
போர்க்களத்திற் கஞ்சாதோன் வேந்தன் சினந்தாலும்
வீரமாய் முன்செல்வான் சொல்.
குறள் 779:
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
சூளுரைத்த வண்ணமே போர்க்களத்தில் மாய்ந்தோரை
யாரும் இழித்துரைப்பா ரோ?
குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.
காத்தவன் கண்கலங்க போர்க்களச் சாவினை
கேட்டுப் பெறுதல் புகழ்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home