Wednesday, January 13, 2021

81 பழைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

81 பழைமை

குறள் 801:

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.


பழகிய  நண்பர்கள் நட்புறவைக் காத்தல்

பழைமை எனப்படும் சாற்று.

குறள் 802:

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்

குப்பாதல் சான்றோர் கடன்.


உரிமையே நட்பின் உறுப்பாகும்! சான்றோர்

மகிழ்தல் கடமையென்று சாற்று.

குறள் 803:

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங் கமையாக் கடை.


நண்பர் உரிமையுடன் செய்ததை ஏற்காத

நட்பினால் என்னபயன் கூறு?

குறள் 804:

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.


கேட்காமல் நண்பன் உரிமையில் செய்தாலும்  

நாட்டமுடன் ஏற்பார் உவந்து.

குறள் 805:

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.


உரிமைதான் என்றோ அறியாமை என்றோ

கருதவேண்டும் நட்பில் வருந்துமாறு செய்தால் !

பெருந்தன்மைப் பண்புதான் நட்பு.

குறள் 806:

எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.


நட்புடன் எல்லையில் வாழ்வோர் கெடுதிகள் 

நட்பினால் வந்தாலும் நட்பைத் துறக்காமல்

எப்படியும் ஏற்பார் தொடர்ந்து.

குறள் 807:

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.


நண்பர் அழிவையே செய்தாலும் நட்பையெண்ணி

அன்பை விலக்கமாட்டார் செப்பு.

குறள் 808:

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.


மற்றவர்கள் சொல்லியும் நம்பாத நண்பருக்குக் 

குற்றத்தைச் செய்தால் அப்பிழை செய்தவர்க்கு

அந்தநாள் நன்னாளாம் கூறு.

குறள் 809:

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.


தொய்வின்றி நன்கு பழகிவரும் நட்பினை

இவ்வுலகம் போற்றும் புகழ்ந்து.

குறள் 810:

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.


நண்பர் பிழைசெய்த போதும்  பகையின்றி

நட்பைத் தொடர்பவரைப் பார்த்துப் பகைவரும்

முற்றும் விரும்புவார் கூறு.

































0 Comments:

Post a Comment

<< Home