Friday, January 15, 2021

எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு!

 ID 817 9565 5462 

பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து!

 நாள்: 16.01.21 மாலை 7 மணிக்கு

பொங்கல் சிறப்புச் சொற்பொழிவு

தலைப்பு:

எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு!



கலித்தொகையில் முல்லைக் கலியின் வரியைத்

தலைப்பாக்கிப் பேசுகின்ற பாலாவை வாழ்த்து!

பலாவை உரித்துச் சுளைகளை நாம்தான் சுவைக்க

உலாவர வைக்கின்றார் இன்று.

ஏறு தழுவல் விழாவின் அறிவிப்பைக் 

கூறும் பறையொலி ஊரிலே கேட்கிறது!

ஆயர் குலத்தின் இளைஞர்கள் கூடிநின்று

காத்திருக்கும் கோலத்தைக் காண்.


காட்சியாளர் பார்க்கப் பரணமைத் துள்ளனர்!

ஏறி அமர்ந்துள்ள ஆயர் குலப்பெண்கள்

ஏறு தழுவுகின்ற காதலர்கள் வெற்றிக்கு

மாறிமாறி மாயவனை வேண்டுகிறார் தங்களுக்குள்!

ஏறுகள் துள்ளுவதைப் பார்.


காளை பிடிக்கவந்த காளையோ காரிகையை

வீரமுடன் பார்த்தேதான் யாரிவள்? கேட்கிறான்!

யாரந்த வெண்காளை தன்னை அடக்குவானோ

வீரனுக்கே அம்மங்கை சொந்தமென்று சொன்னார்கள்!

வீரனோ நானடக்கி வந்திடுவேன் சொல்கவென்றே

வீரமுடன் சொன்னான் நிமிர்ந்து.


எந்தெந்த காளைகளை யாரடக்கு வார்களோ

அந்தந்த வீட்டின்  இளம்பெண்கள் வீரருக்கே

என்றே பறைசாற்றிச் சொல்கின்றார் கூட்டத்தில்!

அன்றைய வீரத்தின் வேர்.


பறைமுழக்கம்  கேட்க திடலில் மணமோ

புகையுடன் சேர்ந்தெழும்ப ஏறுகளை மேகம்

புடைசூழ்ந்த காட்சி! ஆரவாரம் செய்தே

இறங்குகிறார் வீரர் திரண்டு.


சீறி வருகின்ற காளைகளைப் பாத்தேதான்

வீரமுடன் செல்கின்றார்! வீரர்களை நோக்கித்தான்

பாய்ந்து வருகிறது துள்ளித்தான்! காளைகள்

ஓடுகின்ற காட்சியைப் பார்.


 இக்காட்சியை,

“தகை வகை மிசை மிசைப்     

 பாயியர் ஆர்த்து உடன்

 எதிர் எதிர் சென்றார் பலர்

 கொலை மலி சிலை செறி 

செயிர் அயர் சினஞ் சிறந்து

உருத்து எழுந்து ஓடின்று மேல்

 எழுந்தது துகள்

 ஏற்றனர் மார்பு

  கவிழ்ந்தன மருப்பு

  கலங்கினர் பலர்”


 -கலித்தொகை 102; 17-24

என விவரிக்கிறார் அருஞ்சோழன் நல்லுருத்திரனார்.


தேமதுர நற்றமிழ் ஓசையை இவ்வுலகம்

காணொளி வாயிலாக பாலாவின் ஆர்வமிகு

பேச்சிலே கேட்போம் ரசித்தேதான் நாமிங்கே!

ஆற்றலை வாழ்த்துவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்




 

0 Comments:

Post a Comment

<< Home