நண்பர் சுந்தரம் அனுப்பியது
பீட்சா!
பீட்சா ஒன்று; வடிவங்கள் பல!
மதுரமான பீட்சா
மனதைக் குழப்பும்!
சதுரமான பெட்டிக்குள் வந்துசேரும் பீட்சா!
அதைத் திறந்தால் தெரிவது வட்டம்!
சுவைத்துச் சாப்பிட
முக்கோணக் காட்சி!
அவனியில் மக்களும் பீட்சா போல!
வகைவகையாய்ப் பார்ப்போம் பலவடிவில்!
நடக்கின்றார் பல்வேறு கோணத்தில் இங்கே!
வடம்பிடித்துத் தேரிழுக்கும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home