Monday, January 18, 2021

88 பகைத்திறம் தெரிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

88 பகைத்திறம் தெரிதல்

குறள் 871:

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற் றன்று.


பகையுணர்வை இங்கே விளையாட்டாய்க்  கூட

புறத்திலே காட்டுதல் தப்பு.

குறள் 872:

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.


வில்லேந்தும் வீரர் பகைகொண்ட போதிலும்

சொல்லேந்தும் சான்றோர் பகையைத் தவிர்க்கவேண்டும்!

சொல்லின் வலிமை உயர்வு.

குறள் 873:

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.


தன்னந் தனியே பகைக்குவித்துப் பார்ப்பவனை

என்னசொல்ல? மூடனென்றே சொல்.

குறள் 874:

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற் றுலகு.


பகையையைம் நட்பாக்கும் பண்பை மதித்தே

அகிலமே போற்றும் உணர்.

குறள் 875:

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்

இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.


தனக்குத் துணையற்றோர் தங்கள் பகைவர்

அணியிரண்டாய் வாழ்ந்தால் ஒன்றைத் 

துணையாய்த்

தனக்கென மாற்றுதல் நன்று.

குறள் 876:

தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல்.


தனக்கொரு துன்பம் வரும்போது நெருங்கிப் 

பழகாமல் விட்டு விலகாமல் இங்கே

பகைவர்

உறவினைப் பேணல் சிறப்பு.

குறள் 877:

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.

 

நண்பரிடம் துன்பத்தைச் சொல்லாதே! நம்குறையை

நம்பகைமுன் காட்டாதே நீ.

குறள் 878:

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.


வழியுணர்ந்து தன்வலியை, தற்காப்பைக் காக்கும்

தெளிவின்முன் வன்பகை  தூசு.

குறள் 879:

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.


முளையிலேயே முள்மரத்தை வெட்டவேண்டும்! என்றும்

பகையை வளரும்முன் வீழ்த்து.

குறள் 880:

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.


பகைவர் செருக்கை அழிக்காதோர், மூச்சு

விடுவதற்குள் காண்பார் அழிவு.










































0 Comments:

Post a Comment

<< Home