Monday, January 18, 2021

90 பெரியாரைப் பிழையாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

90 பெரியாரைப் பிழையாமை

குறள் 891:

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

வல்லவரின் ஆற்றலைத் தூற்றாமல் உள்ளதே

நல்லவரைக் காக்கும் நெறி.

குறள் 892:

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்

பேரா இடும்பை தரும்.


பெரியாரை வாழ்வில் மதிக்கவேண்டும்!

இல்லை,

பெரியாரால்  துன்பந்தான் சொல்..

குறள் 893:

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.


பெரியாரைக் கேட்காமல் செய்தால் கெடுதி!

மதியாமல் செய்தால் அழிவு.


👍 😊 நச் 🙏சி.ஆர்.

குறள் 894:

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்

காற்றாதார் இன்னா செயல்.


ஆற்றலற்றோர் ஆற்றல் படைத்தவர்க்குத்  தீங்கிழைத்தால்

ஏற்பார் அழிவை வலிந்து.

குறள் 895:

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.


பேரரசின்  கோபத்திற் காளானோர் 

எங்குசென்ற

போதிலும் வாழ்தல் அரிது.

குறள் 896:

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


தீயால் சுடப்பட்டோர் தப்பலாம்! மூத்தோரைக்

காயப் படுத்தல் அழிவு.

குறள் 897:

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.


பெரியார் சினந்தால், பெருஞ்செல்வம் 

கொண்டோர்

வளங்களால் என்னபயன் செப்பு?

குறள் 898:

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.

குணக்குன்றாய் வாழ்பவரைச் சீரழிப்ப தற்கு

நினைத்தாலே போதும் மலைபோல செல்வம்

படைத்தோர்க்கோ பேரழிவு உண்டு.

குறள் 899:

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.


பண்பார்ந்த சான்றோர் சினப்பட்டால் எவ்வரசும்

கண்முன்னே வீழ்ந்து படும்.

குறள் 900:

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

பண்பாளர் கோபத்திற் காளானால் செல்வந்தர் 

என்றாலும் வாழ்தல் அரிது.






















0 Comments:

Post a Comment

<< Home