Friday, January 22, 2021

99 சான்றாண்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

99 சான்றாண்மை

குறள் 981:

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


நல்லவை  எல்லாமே சான்றோர் கடமையென்பார்!

உள்ளத்தால் ஏற்பார் உவந்து.

குறள் 982:

குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று.


நல்ல குணங்களே சான்றோர்க் கழகாகும்!

மற்றவை அல்ல அழகு.

குறள் 983:

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண்.


அன்புடன் நாணமும் ஈகையும் கண்ணோட்டம்

உண்மை எனஐந்தும் சான்றாண்மைப்

பண்புகளை

நின்று நிலைக்கவக்கும் தூண்.

குறள் 984:

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.


கொல்லாமை நல்லறமாம்! மாற்றார் குறையைச்

சொல்லாமை சான்றாண்மைப் பண்பு.

குறள் 985:

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.


செயல்வீரர் ஆற்றல் பணிவாம்! அதுவே

பகவரை மாற்றும் படை.

குறள் 986:

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.


யாரிடமும் தோல்வியை ஏற்கின்ற பக்குவமே

சால்பின் உரைகல்லாம் சாற்று.

குறள் 987:

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.


இன்னல்கள் செய்தவர்க்கு நன்மைகள் செய்யாத

பண்பால் பயனென்ன சான்றாண்மை கொண்டவர்க்கு?

பண்படுத்தும் ஆண்மையே சால்பு.

குறள் 988:

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.


சான்றாண்மை என்னும் உறுதி இருப்பவர்க்கு

ஏழ்மை இழிவல்ல சாற்று.

குறள் 989:

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார்.


ஊழிவந்து தாக்கினாலும் தான்மாறார் 

சான்றாண்மை

ஆழி எனப்படுவார் தான்.

குறள் 990:

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்

தாங்காது மன்னோ பொறை.


சான்றோரின் பண்பு குறைந்தால் உலகமோ

தாங்காது தன்பாரந் தான்.




































0 Comments:

Post a Comment

<< Home