Thursday, January 21, 2021

98 பெருமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

98 பெருமை

குறள் 971:

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்

கஃதிறந்து வாழ்தும் எனல்.


வாழ்வின் ஒளியாகும் ஊக்கம்! ஊக்கமின்றி

வாழ்தலே என்றும் இழிவு.

வணக்கம்.

இது சரியாக வருகிறதா 

சி ஆர்.


குறள் 972:


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


பிறப்பால் சமந்தான்!  தொழிலின் திறத்தால்

சிறப்புகள் வேறுபடும் சாற்று.

குறள் 973:

மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.


மேல்நிலையில் பண்பற்றோர் தாழ்ந்தவரே! பண்புள்ளோர் 

கீழ்நிலை என்றாலும் வாழ்வில் உயர்ந்தவரே!

மேல்கீழ் அளவுகோல் பண்பு.

குறள் 974:

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.


நெறிபிறழா வாழ்க்கையை வாழ்வோர்க்குக் கற்பில்

நெறிபிழாப் பெண்பெருமை உண்டு.

குறள் 975:

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை யுடைய செயல்.


பெருந்தடை வந்தும் செயலை முடிப்போர்

பெருமைக் குரியோராம் சாற்று.

குறள் 976:

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.


பெரியோரின் மாண்பினைக் காக்கும்

உணர்ச்சி 

சிறியோர்  மனத்திலில்லை சொல்.

குறள் 977:

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்

சீரல் லவர்கண் படின்.


சிறப்புகள் எல்லாம் தகுதியற்றோர் கொண்டால்

செருக்குடன் வாழ்வ தியல்பு.


குறள் 978:

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.


பெருமை உடையோர் பணிவுடன் வாழ்வார்!

செருக்குடன் தன்னை வியந்தேதான் வாழ்வார்

சிறுமை உடையோர்தான் செப்பு.

குறள் 979:

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.


செருக்கின்றி வாழ்தல் பெருமை! சிறுமை

செருக்கெனும் ஆணவந்தான் சாற்று.

குறள் 980:

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.


பிறர்குறை கூறாமல் வாழ்தல் பெருமை!

சிறுமை, குறைகூறும் பண்பு.




























0 Comments:

Post a Comment

<< Home