அரைக்கிணறு
சிக்கல் தவிர்! அரைக்கிணறு!
வெய்யில் தகிக்கறதே என்று நெருப்புக்குள்
கைவிட்ட அற்பனைப் போலத்தான் வாழ்க்கையில்
சிக்கலைச் சிக்கலாக்கி வாழும் முறைதவறு!
சிக்கல் தவிர்க்கப் பழகு.
அரைக்கிணறு தாண்டியாச்சு! மீத முள்ள
அரைக்கிணறைத் தாண்டத் தயங்கியே நின்றால்
விழுவோம் கிணற்றுக்குள்! தாண்ட முயன்றால்
எழுந்தேதான் தாண்டலாம் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home