Tuesday, June 01, 2021

69 தூது

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

69 தூது

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.


அன்பு, குடிப்பிறப்பு, ஆட்சியாளர் பாராட்டும் 

பண்புகள் தூதர்க் கழகு.

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்

கின்றி யமையாத மூன்று.


ஈடற்ற அன்பும், அறிவுடன்  சொல்லாற்றல் 

தூதருக்கு முப்பண்பாம் கூறு.

குறள் 683:

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.


தன்நாட்டின் வெற்றிக்குத் தூதுரைக்கும் தூதருக்குப்

பண்பட்ட  வல்லமையே பண்பு.

குறள் 684:

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.


அறிவுடன் தோற்றப் பொலிவும் படிப்பும்

நிறைந்தவர் தூதுக்கு நன்று.

குறள் 685:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.


சொல்வதைச் சொல்லியும் நீக்குவதை நீக்கியும்

சொல்வதே தூதின் சிறப்பு.

குறள் 686:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்க தறிவதாந் தூது


கற்றதைச் சொல்லி எதற்குமே அஞ்சாமல் 

சொல்கின்ற வீரமே தூது.

குறள் 687:

கடனறிந்து காலங் கருதி இடனறிந்

தெண்ணி உரைப்பான் தலை.


கடமையை, காலம், இடத்தை உணர்ந்தே

சிறப்பாகப் பேசுவதே தூது.

குறள் 688:

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.


துணிவும், துணையும், ஒழுக்கமும் கொண்ட

மனப்பண்பே தூதர்க் கழகு.

குறள் 689:

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.


வாய்தவறி கூட இழிசொற்கள் கூறாமல்

ஆள்வோரின் நன்மைக்கும் நாட்டுக்கும் பாடுபடும் 

தூயமனம் தூதர் சிறப்பு.

குறள் 690:


இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாம் தூது.


தனக்கழிவு வந்தாலும்  அஞ்சாமல் வேந்தன்

இமையாதல் தூதரின் பண்பு.



0 Comments:

Post a Comment

<< Home