Thursday, August 05, 2021

தாய்ப்பால் வாரம்

 ஆகத்து 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது


தாய்ப்பால் வாரம் ஆகத்து 1--7


எத்தனைப்பால் உண்டெனினும் அத்தனையும் இத்தாய்ப்பால்

சத்துக் கிணையாமோ? ரத்தத்தைப்

பாலாக்கிப்

பற்றுடன் தாய்கொடுக்கும் பாலிலே

நோயெதிர்ப்பு

சக்தி உள்ளதென்றே  கூறும் அறிவியல்!

அப்பால் குழந்தைக்( கு) அமுது.


உடலழகு போய்விடும் என்றெண்ண வேண்டாம்!

கடமையாய்த் தாய்மார்கள் தாய்ப்பாலைத் தந்தால்

குடும்ப மழலைகள் நோய்தடுத்தே வாழ்வார்!

தவிர்த்தல் மழலைக்குக் கேடு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home