Tuesday, August 17, 2021

குறள்

 குறள்


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.


வண்டியுடன் மோதி விழுந்தேன் நடுத்தெருவில்!

என்னுடைய கைபேசி கீழே விழுந்தது!

அந்தோ! ஒருவர் விரைந்தே எடுத்தேதான்

தன்வண்டி ஏறிப் பறந்தார் மறைந்துவிட்டார்!

தன்னடக்கம் இன்றியே மற்றவர் பொருள்களை

தன்னுடைமை யாக்குகின்ற நீசரானார்

பண்பிழந்தார்!

மக்களுள் மக்களாய் வாழும் கயவர்கள்

இப்படித்தான் செய்வார்கள் வக்கிரப் புத்தியால்!

நற்றமிழ் வள்ளுவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home