கொரோனா! போய்விடு நீ!
கொரோனா! போய்விடு நீ!
அழையா விருந்தாளி யாகத்தான் வந்தே
நுழைந்தாய்! மாறிமாறித் தாக்கும் இழிந்த
நிலையெடுத்தே சுற்றி வருகின்றாய்! உன்னை
நிலைப்படுத்திக் கொள்ள முயல்கின்றாய் ஏனோ?
மலைக்கின்றோம் நாங்கள்தான் பார்த்து.
கொத்துகொத்தாய் மக்களைக் காவுகொண்டாய் தேம்பவிட்டாய்!
எப்படியோ நாளும் பிழைத்தேதான் வாழ்ந்துவந்தோம்,!
உற்றார் உறவினரை வம்பாய்ப் பிரித்துவிட்டாய்!
கொத்தியது போதுமே செல்!
வந்தச் சுவடின்றிச் சென்றுவிடு நீயாக!
எங்களை வாழவிடு வேடிக்கை பார்க்காதே!
எங்களது வாழ்வே தலைகீழாயப் போகிறது!
எங்களை வாழவிடு இங்கு.
அரசுகள் தம்மால் இயன்ற அனைத்தும்
செயல்படுத்திப் பார்க்கிறது! மீறிவந்து நீயோ
கலங்கவைத்துப் பார்க்கிறாய்! சோகத்தைத் தூவி
உளைச்சலைக் கூட்டுவது ஏன்?
முகக்கவசம் போடுகின்றோம்! கைகழுவும் சுத்தம்
அகவுணர்வில் செய்கின்றோம் சத்துணவு நாளும்
வகைவகையாய் உட்கொண்டு வாழ்கிறோம்! உன்னைத்
தடுக்க தடுப்பூசி போடுகிறோம்! வந்தால்
மருந்துகளும் ஏற்கிறோம்! ஆனாலும் நீயோ
உருக்குலைத்துப் பார்ப்பதேன் சொல்?
கொரோனாவே! போய்விடு போய்விடு நீதான்!
நெருங்காமல் போய்விடு! மக்களை விட்டு
உலகத்தை விட்டேதான் போய்விடு நீதான்!
கொரோனாவே போய்விடு நீ.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home