ஆறறிவே ஆணவத்தைத் தூற்று!
நன்றி தொல்காப்பியம் நூற்பா:
கவிதை
ஆறறிவே ஆணவத்தைத் தூற்று!
ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு
ஓரளவு சிந்திக்கும் ஐயறிவைச் சார்ந்தவைகள்
சீரழிவை விட்டுத்தான் நேர்வழி் தேர்ந்தெடுக்கும்!
ஆறறிவு மாந்தர்கள் ஏனோதான் சீரழிவுப்
பாதையென்று யார்சொன்ன போதும் மறுத்தேதான்
நேர்வழியை வாழ்வில் தவிர்த்தேதான்
வாழ்கின்றார்!
ஆறறிவே! ஆணவத்தைத் தூற்று.
மதுரை பாபாராஜ்
-------------------------------------------------------------------
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது:
'ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,
இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,
மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,
நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,
ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,
ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.'
--------------------------------------------------------------------
ஓரறிவு கொண்ட உயிரினங்கள்: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.
ஈரறிவு கொண்டு உயிரினங்கள்: நத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)
மூவறிவு: எறும்பு, கரையான், அட்டை
நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு
ஐயறிவு: விலங்குகள், பறவைகள்
ஆறறிவு: மனிதர்கள்
-------------------------------------------------------------------
0 Comments:
Post a Comment
<< Home