Monday, January 03, 2022

காலமே தீர்த்துவை!


 காலமே தீர்த்துவை!


மேல்படியில் என்னைப் படுக்கவைத்து

நாள்தோறும்

காலமோ கால்களால் எட்டி உதைத்தேதான்

பார்த்துப் படிப்படியாய் இங்கே உருட்டித்தான்

பார்க்கிறது! மேனியில் காயம் ரணமாகி

ஓலமிட வைக்கிறதே உள்ளம் துடிக்கிறது!

காலமே! சிக்கலைத் தீர்த்துவை! கெஞ்சுகிறேன்!

கோலத்தை மாற்றுவாயா நீ?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home