Monday, February 07, 2022

தென்காசி நிறைவு 07.02.22

 

தென்காசி திருவள்ளுவர் கழகத்திற்கு வாழ்த்து!

ஆண்டுகள் 95

நூற்றாண்டை நோக்கி வீரநடை போடுகின்ற
ஆற்றல் நிறைந்த படையுடன் வள்ளுவத்தை
ஆய்ந்தறிந்தே ஆழங்கால் பட்ட அறிஞர்கள்
வாழ்த்தி மகிழ்கின்றார் இங்கு.

சான்றோர் நிறைந்த கழகம்! குறள்நெறியில்
ஊன்றித் திளைக்கும் கழகம்! சிறப்பாக
செம்மாந்து நிற்கும் கழகம்! தரணிபோற்றும்
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

07.02.22 நிகழ்வுகள்

இறைவணக்கம் : செல்வி க.நி. மகிழ்மலர் பொள்ளாச்சி.

இறைவணக்கந் தன்னை அழகாகப் பாடித்
தொடங்கி மகிழ்மலர் இன்றோ அவையை
அகமகிழச் செய்தார் இங்கு.

அறிமுக உரை : திரு. ஆ. சிவராமகிருஷ்ணன்

அறிமுகம் செய்தார் பெரியவர் உவந்தே!
குறள்மணம் சூழ மகிழ்ந்து.

வரவேற்புரை : திரு. ச.இராசேந்திரன்

வரவேற் புரையுடன் இன்று நிகழ்வை
நடத்தியும் தந்தார் உவந்து.

தொடக்க உரை திரு. திருவேங்கடம்

தொடக்க உரையைச் சிறப்பாகத் தந்தார்!
குறள்களைச் சொன்னார் களித்து.

முன்னிலை உரை : திரு.ஆ.பு.நாறும்பூநாதன்

முன்னிலை ஏற்றே உரைநிகழ்த்தி ஆற்றலில்
பன்முகத் தன்மையைக் காட்டினார் பண்பாளர்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
===================================
ஆய்வுரை : வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் "

உரை வழங்குநர் : 
குறள்நெறிக் கோமான் டாக்டர் .ப.ரமேஷ் . கரூர்

நானென்றும் வாழ்வில் எனதென்றும் தன்முனைப்புக்
காரணத்தால் ஆணவம் ஆட்கொள்ள உள்ளத்தில்
வேரூன்ற விட்டுவிட்டால் பேரழிவு காத்திருக்கும்!
ஆரிருளாகும் வாழ்க்கை! உணர்.

நூலறிவு பட்டறிவு வாலறிவு என்றே
ஆழமாய்த் தந்தார் விளக்கத்தை இங்கு!
சாலப் பொருத்தம் குறள்நெறிக் கோமான்
ஜேகேயை வள்ளுவ ரோடிங் கிணைத்தே
பாகாய் உருகவைத்தார் வாழ்த்து.

சிறப்புரை : திண்ணியர் ஆகப்பெறின்

பாவலர் . திரு. சா.சண்முகம்
தலைமை ஆசிரியர் ( ப.நி)  கள்ளக்குறிச்சி

இறைநிலையை எய்திட அந்த இறைவன்
நிறைமனம் கொள்ள சரணடைந்தால் 
தாளை
உறுதியுடன் பற்றினால் பக்திக்கு வெற்றி
கிடைக்குமென்றே சொன்னார் திளைத்து.

குற்றாலச் சாரலை விஞ்சும் குறள்சாரல்
வற்றாமல் நாளும் பொழிந்ததைக் கேட்டோம்!
முற்றும் மங்கலமாய் இங்கே நிறைவான
அற்புதம் கண்டோம் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

கனியன் கிருஷ்ணன்,தென்காசி வாழ்த்து:

பாமரர் முதல் பண்டிதர்
வரை அவர்களது திறன்
கண்டு பாட்டால் பாராட்டும்
பாபாஜி..வாழ்க நீவிர்
பல்லாண்டு.

கணியன் கிருஷ்ணன்.


0 Comments:

Post a Comment

<< Home