Friday, February 04, 2022

தென்காசி்நிகழ்வு 4.2.22


தென்காசி்திருவள்ளுவர் கழகமைம் சென்னை வள்ளுவர் குரல் குடும்பமும்( VOV) இணைந்து நடத்தும்

இணையவழிச் சொற்பொழிவு:


4th February 2022

அறிமுக உரை:

திரு.ஆ.சிவராம கிருஷ்ணன்


வள்ளுவத்தைப் பக்தி நெறியாக்கி வாழ்பவர்!

தெள்ளத் தெளிவாய் அறிமுகம் செய்துவைத்தார்!

தள்ளாமை இங்கே பொருட்டல்ல! என்றேதான்

எல்லோர்க்கும் நல்லவராய் வாழ்ந்துவரும் அய்யாவின்

வள்ளுவத் தொண்டை வணங்குவோம் வாழ்த்துவோம்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


குறள்நெறிக் குரிசில் சி.இராசேந்திரன்VOV


உற்சாகம் ஊக்கம் சுறுசுறுப்பு இவைமூன்றும்

அற்புதமாய் ஆற்றலாய் மாற இராசேந்ரன்

நற்றமிழால்  இன்று நிகழ்வை  நடத்தினார்!

வெற்றிக்கு வித்திட்டார் சொல்


அம்மையார் கடவுள் வாழ்த்து:


முதல்பத்துத் தேன்குறளைப் பண்ணமைத்துப் பாடி

கடவுளை வாழ்த்தினார் வாழ்த்து.


திரு தீத்தாரப்பன்


சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவையோர்

சிறப்புகளைக் கூறி ரசிகமணி வாழ்வில்

நடந்ததைச் சொல்லி வரவேற் புரையை

நடத்தினார் நற்றமிழால் வாழ்த்து.


திரு.சிவ.சதாசிவம்


தொடக்கவுரை தன்னை அருமையாய்த் தந்தார்!

சிறக்கவைத்த அய்யாவை வாழ்த்து.


திரு இளங்கோ


அரைடவுசர் போட்ட பருவம் முதலாய்க்

குறளறிஞர் பேச்சைச் செவிமடுத்துக் கற்றேன்

குறளை எனச்சொன்னார் நண்பர் பணிவாய்!

மனதார வாழ்த்துவோம் நாம்.


மருத்துவர் சுப திருப்பதி 

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் 

திருச்சி 


 தலைப்பு: மறப்பது நன்று?!


மருத்துவர் அய்யா திருப்பதியார் பேச்சு

அருவிப் பொழிவினை விஞ்சுகின்ற பேச்சு!

மளமள வென்று தலைப்பின் கருத்தைத்

தவழவிட்டார் வண்டமிழால் வாழ்த்து



கவிஞர் மெய்ஞானி பிரபாகர பாபு

சொற் கோட்டமும் உட்கோட்டமும் 


சிந்தனைக் கோணவி்ல்லை என்றாலே மாந்தரின்

சொல்லும் செயல்களும் செப்பமாகும் என்றேதான்

சொல்வேந்தர் மெய்ஞானி நன்குரைத்தார் நற்றமிழால்!

சொல்விருந்துப் பாவலரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

தொகுப்புரை நாயகர்

பாபாவை பாராட்டுகிறோம்.

கணியன் கிருஷ்ணன்.

தென்காசி.

 

0 Comments:

Post a Comment

<< Home