வாழ்வின் இயல்பு
நீரிலே துள்ளி விளையாடும் மீனினங்கள்
வாரிப் பிடிக்கும் வலையிலே சிக்கினால்
மீனினம் தன்னுயிரைக் காக்க துடித்திருக்கும்!
வாழ்விலும் இன்ப அலைகளில் துள்ளுவோர்
சூழ்நிலை வீசுகின்ற துன்ப வலைக்குள்ளே
வீழ்ந்தால் துவண்டுபோவார்! உள்ளத்தால் நொந்துதான்!
வாழ்வின் இயல்பே இது.
மதுரை பாபாராஜ்
எப்படி உங்களால் மட்டும்
இப்படி எளிமையாக பாடல்
எழுத முடிகிறது.
எனக்கு பெரும் வியப்பைத்
தருகிறது.
எனது அறியாமைதான்
காரணமோ?
தென்.கி
0 Comments:
Post a Comment
<< Home