நாவின் சுழற்சி
நாவின் சுழற்சி!
நேற்றொரு மாதிரி பேசிவிட்டு இன்றிங்கே
மாற்றித்தான் பேசுகின்றார் கூசாமல்!
நாளைதான்
எப்படிப் பேசுவாரோ என்றே நினைப்பதற்குள்
அப்படிப் பேசவில்லை இப்படித்தான் பேசினேன்!
முற்றிலும் மாற்றியே பேசிநின்றார்! மாற்றிமாற்றி
இப்படியும் அப்படியும் பேச குழப்பத்தின்
உச்சிக்கே சென்றுவிட்டேன் நான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home