இல்லறம் பாழாகும்
இல்லறம் பாழாகும்,!
இல்லறம் என்பது மாட்டுவண்டி!
இணயர் இழுக்கும் மாடிரண்டாம்!
ஒற்றுமை யாக இழுத்தால்தான்
வண்டியும் நேராய் சென்றிருக்கும்!
ஒன்றோ ஒருபக்கம் இழுத்திருக்க
ஒன்றோ மறுபக்கம் இழுத்திருந்தால்
வண்டிப் பயணம் தொல்லைதான்!
நிம்மதி துளியும் இல்லைதான்!
மிரண்டு முரண்டு பிடிக்காமல்
இரண்டு மாடுகள் ஓடவேண்டும்!
இணையர் உள்ளம் இணக்கத்தை
மறுத்தால் வாழ்க்கைப் பாழாகும்!
அறநெறி மறந்தே வாழ்கின்றார்
நிம்மதி தேடி அலைகின்றார்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home