Thursday, August 03, 2023

குறளின் சிறப்புகள்

 திருக்குறள் சிறப்புகள்!

படம்

உன்னை நினைத்து

பாடல்

கவிஞர் யுகபாரதி


என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

பாடல் ராகத்தில் குறளின் சிறப்புகள்:


திருக்குறள்தான் வாழ்வியலின் உயிராகுமே

தினம்படித்தால் வாழ்வெல்லாம் வளமாகுமே


ஆண் : 

குறளே துணை என்பதா

இல்லை இணை என்பதா

குறளைக் குறளாக எண்ணித்தான் படி

என்பதா

குறளே உயிர் என்பதா


பெண் : 

திருக்குறள்தான் வாழ்வியலின் உயிராகுமே

தினம்படித்தால் வாழ்வெல்லாம் வளமாகுமே


—BGM—


ஆண் : 

குறளோடு் நாமும் 

கைகோர்த்து வாழ்ந்தால்

வாழ்விருக்கும் நாள்வரையில் காப்பாற்றுமே


பெண் : 

குறளாக உயிரும்

கருத்தாக மனமும்

நம்வாழ்வில் உள்ளவரை மாசில்லையே


ஆண் : 

குறளை நான்படித்தேன்

பொருளை நான் உணர்ந்தேன்

தெளிவை நானடைந்தேன்

பண்பை நான் கற்றேன்

உரைகள் பல கண்டு குறளிங்கே உயிர் வாழுமே

உலகில் குறள் வாழுமே


திருக்குறள்தான் வாழ்வியலின் உயிராகுமே

தினம்படித்தால் வாழ்வெல்லாம் வளமாகுமே


பெண் : 

உலகந்தான் இங்கே 

உருமாறிப் போகும்

குறள்மட்டும் என்றும் இங்கே

நிலையாகுமே


ஆண் 

குறளிந்த உலகில்

பொற்காலம் காணும்

எட்டுத் திசை எல்லாம் இங்கே

ஒளிவீசுமே


பெண் : 


குறளை நான் படித்தேன்

குன்றில் விளக்கானேன்

குறளோ பொதுமுறைதான்

வாழ்வின் நெறிமுறைதான்


பெண் : 


குறள்கள் வயலானால்

உரைகள் எல்லாம் உரமானதே

என்றும் உரமானதே


திருக்குறள்தான் வாழ்வியலின் உயிராகுமே

தினம்படித்தால் வாழ்வெல்லாம் வளமாகுமே


ஆண் : 

…குறளே துணை என்பதா

இல்லை இணை என்பதா

குறளைக் குறளாக எண்ணித்தான் படி

என்பதா

குறளே உயிர் என்பதா


பெண் : 

திருக்குறள்தான் வாழ்வியலின் உயிராகுமே

தினம்படித்தால் வாழ்வெல்லாம் வளமாகுமே

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home