கொக்கின் பெருந்தன்மை
கொக்கின் பெருந்தன்மை!
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
கொக்கை நரியழைத்துத் தட்டிலே
அக்கறையாய்
வைத்த விருந்தால் அவமானப் பட்டாலும்
கொக்கு நரியை அழைத்தேதான் தட்டிலே
வைத்த விருந்தாலே கொக்கின் பெருந்தன்மை
திக்கெட்டும் நற்புகழ் நாட்டியது காடெல்லாம்!
வெட்கத் துடனே நரியங்கே
நின்றதே!
என்றும் பெருந்தன்மை போற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home